சென்னை எக்ஸ்பிரஸ்யில் தீ விபத்து!! உயிர் தப்பிய பயணிகள்!!
சென்னையில் இருந்து ரயில் ஒன்று மும்பையை நோக்கி சென்று கொண்டிருத்த நிலையில் திடீரென்று தீ பற்றியது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கி உயிர் தப்பினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் கடந்த வியாழக்கிழமை மாலை புறப்பட்டது.இது மும்பையை நோக்கி செல்கின்றது.
இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்த இந்த ரயில் திடீரென்று எதிர்பாரத விதமாக என்ஜினில் தீ பிடித்துவிட்டது.
இதனால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். பின்பு அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதன் பிறகு வியாசர்பாடி ரயில் நிலையத்தில் லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் என்ஜினில் இருந்து பயணிகளின் பெட்டிகளுக்கு வரக்கூடிய இணைப்பில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டதாகவும் இதனால் மின் கம்பியில் உரசல் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.லோகமான்ய திலக் எக்ஸ்பிராஸ் ஆனது சேதமடைந்துள்ளதன் காரணமாக அது சரி செய்வதற்காக லோகோ ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.