எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்!!

0
196
#image_title

எலும்பு முறிவு ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்

சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பாராத விதமாக விபத்தில் அடிபட்டு எலும்பு முறிவு விடும். மருத்துவ ஆய்வறிக்கையில் 10ல் 6 பேருக்காவது இந்த எலும்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள்.

சிறுவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் உடனே சரியாகிவிடும். ஆனால், பெரியவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவர்களுக்கு எலும்பு கூடுவது கொஞ்சம் சிரமம் தான்.

அப்படிப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவிகள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம் –

1. கை எலும்பு முறிந்துவிட்டால், கைகளின் இரண்டு பக்கங்களிலும் மூங்கில் குச்சிகள் வைத்துத் துணியால் முதலில் கட்டுப்போட வேண்டும். பின்னர், மூங்கில் குச்சி கிடைக்காவிட்டால், சிறிய மரப்பலகை அல்லது அடி ஸ்கேல்களை வைத்து கட்டுப்போட்டு விடலாம். முறிந்த எலும்பு அசைவதை இந்த கட்டுக்கள் தடுக்கும். முறிந்த பகுதி அசைந்தால் அவர்களால் வலியை தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் இந்த மாதிரியான கட்டைகளை வைத்து கட்டுப்போடுகிறார்கள்.

2. எலும்பு முறிந்தால் கை, கால்களை தொங்க போடக்கூடாது. முறிந்த பாகம் தொங்கினால், முறிவு ஏற்பட்ட இடத்தின் கீழ் ரத்தம் தேங்கி வீக்கம் ஏற்பட்டு விடும். இதனால், வலியும் அதிகரித்து விடும். அதனால், முறிந்த எலும்புகளை நேராக வைக்க வேண்டும்.

3. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் முழங்கையை ‘L’ வடிவில் உள்நோக்கி மடக்கி, மார்போடு சேர்த்து வைக்க வேண்டும். மேலும், கழுத்துக்கும் கைக்கும் சேர்த்துத் துணியால் ஒரு தொட்டில் போலக் கட்டுப் போட வேண்டும்.

4. இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் அடிபட்டவரைப் படுக்க வைக்க வேண்டும். அடிப்பட்ட கால்களை நேராக நீட்டி வைக்க வேண்டும். ஒரு அகலமான துணியால் இடுப்பைச் சுற்றிக் கட்ட வேண்டும். இடுப்புக்குக் கீழே தொடைகள் தொடங்கும் இடத்தில் மற்றொரு கட்டுப் போட வேண்டும். பின்னர், இரு இடத்தையும் சேர்த்தாற்போல முடிச்சு போட வேண்டும். இந்த முடிச்சு, பக்கவாட்டு பகுதியில் இருக்க வேண்டும். தரையில் ஊன்றக் கூடாது.

Previous articleவீட்டில் லட்சுமி கடாச்சம் பெருக சிறந்த வழிகள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!
Next articleவைட்டமின்கள் ஏ, பி, சி குறைந்தால் என்ன நடக்கும்!!? இதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்!!?