மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

Photo of author

By Savitha

மார்ச் 15ல் கூடும் முதல் சட்டதிருத்த மசோதோ கூட்டம் – அடுத்த தேர்தல் ஆணையர்கள் யார் யார்?

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்கோயல் அடுத்த நாளே மத்திய அரசால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் இதற்கு உச்சநீதி மன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், ஆனால் அவர் நல்ல உடல்நிலையில் தான் உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்க்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தலாம் என்ற விவாதத்தில் தலைமை தேர்தல் அதிகாரியான ராஜீவ் குமாருக்கும் அருண் கோயலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன எனவே அவர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்ற தகவல் தெரியவில்லை.

மற்றோறு தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திரா பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார் இப்போது ஒரே ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார்.

இந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கூட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விலக்கிவிட்டு மத்திய அமைச்சர்களை இடம்பெற செய்யும் புதிய மசோதா கடந்த டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடதக்கது.