மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!
கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு இரண்டு மணியளவில் கரையை கடந்தது.அதனால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். நேற்று நீலகிரி பகுதிகளில் அணையில் நீர்வரத்து அதிகம் வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் ,மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வெள்ள நிவாரணம் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் அதற்கான எந்த தொகையும் இதுவரை முறையாக அறிவிக்க வில்லை.அதற்கான நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர்.மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீவார்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.