மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
71

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார்.செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் கூறியதவாறு:

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்றும்,தமிழகத்தில் உள்ள 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரையில் 1 கோடியே 3 லட்சம் பேர் மின்னினைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அதில் இணையதளம் வாயிலாக 60 லட்சம் பேரும் சிறப்பு முகாம் வாயிலாக 52 லட்சம் பேரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.மீதம் இருப்போர் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்கலாம் என்றும் அவர் கூறினார்.வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி அரசு விடுமுறை என்பதனால் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பலரும் எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
இதைக் குறித்து மக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை.கடந்த ஆட்சி காலத்தின் செலவினங்களை சீரமைக்கும் பணியில் தமிழக மின்வாரியத் துறை செயல்பட்டு வருகிறது.மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதனால் நடைமுறையில் உள்ள மின்வினியோகத்தில் எந்தவித மாற்றமும் வராது என்றும்,ஆதார் எண்ணை இணைப்பதனால்,மின் வினியோகத்தில் மாற்றம் வரும் என பொது மக்களோ, வணிகர்களோ,தொழில் அதிபர்களோ எந்தவித அச்சமும் அடைய தேவையில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
Pavithra