இனி மீனவர்களை சிறைபிடிக்க கூடாது!! முதலமைச்சர் கடிதம்!!
தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர்.
இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு அவர்களை அச்சுர்த்துவது மற்றும் நாடுகளில் வைத்து தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது
மேலும் அவர்களை சிறை பிடிப்பது ,துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற பல கொடுமைகளை இலங்கை கடற்படையினர் அரங்கேற்றி கொண்டே வருகின்றனர்.
இவை அனைத்தையும் சரி செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்த கடிதத்தில் ஸ்டாலின் அவர்கள் ,கூடிய விரைவில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கான நட்வைக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழக மக்கள் இலங்கை கடற்படையின்றால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவது போன்றவற்றை தடுப்பது குறித்து இலங்கை அதிபரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து மீன்பிடி படகுகளை பறித்து நாட்டுடமையாக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இவை அனைத்தையும் நிறைவேற்றும் விதமாக தமிழகத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு அதிகாரபூர்வ உறுதி அளிக்க இலங்கை அதிபரை பிரதமர் மோடி வலியுறத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.