இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

Photo of author

By Savitha

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும் 150 -கிலோ மீன் பறிமுதல் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீனவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் 90 கடல் மைல் பகுதியில் அத்து மீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த விசைப்படகை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கடலோர பாதுகாப்பு படையினர் இந்தப் படகில் இறங்கி விசாரணை செய்ததில் இலங்கை நீர்க்கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 17ஆம் தேதி மீன் பிடிக்க வந்ததாகவும் படகில் நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த பெனில், விக்டர்இமானுவேல், ஆண்டனி ஜெயராஜா, ரஞ்சித், ஆனந்தகுமார் ஆகிய ஐந்து மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து படகு மற்றும் ஐந்து மீனவர்களையும் கடலோர பாதுகாப்பு படை யினர் தருவைகுளம் கடற் பகுதிக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்ததுடன் படகு மற்றும் படகில் இருந்த 150 கிலோ மீனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் மத்திய உளவு பிரிவு போலீசார் கியூ பிரிவு போலீசார் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் இலங்கையை சேர்ந்த ஐந்து பேரும் மீன்பிடிக்க தான் வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தல் ஈடுபட வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.