ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!

0
206
One person attacked 5 people! Excitement at the temple festival!
One person attacked 5 people! Excitement at the temple festival!

ஒரே குத்தில்  ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐவர்  ! கோவில் திருவிழாவில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக கோவில் திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் தினந்தோறும் காலை,மாலை இரு  நேரங்களில் ஒலிபெருக்கியின் மூலம் பாடல் போடுவார்கள். அதே ஊரை  சேர்ந்தவர்  ஆனந்த். இவர் மதுவுக்கு அடிமையானவர். நேற்று ஆனந்த் மது போதையில் கோவிலில் பாட்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டார்.

அப்போது  ஊர் நாட்டாமை முத்தையா (47) மற்றும்  சேகர் (44), ராம்குமார் (19), சுந்தரமூர்த்தி (36), கருப்பசாமி போன்றவர்கள் ஆனந்தை இவ்வாறு செய்யக்கூடாது என்றும் தடுத்தனர். ஆத்திரமடைந்த ஆனந்த் அவர்களை மது பாட்டிலால் சரமாரியாக குத்தினார். கோயிலில் இருந்த பக்தர்கள், சண்டையில் படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த மோதலில்  பலத்த  காயமடைந்த ஊர் தலைவர் முத்தையா மேல்  சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

5 பேரைக் குத்திய ஆனந்தும், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டு கோபமடைந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆனந்தை தாக்குவதற்காக மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள். மேலும் போலீசார் ஆனந்தை கைது செய்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆனந்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை செய்த ஆனந்தின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது என போலீசார் கூறினார்கள்.

Previous articleநேற்றை விட இன்று சற்று கொரோனா அதிகரிப்பு! உச்சகட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
Next articleவளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!