தொடர்ந்து மிதந்து வரும் பெண்களின் சடலங்கள்! அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் சென்ற வாரம் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் சடலம் வாய்க்காலில் மிதந்து வந்தது. அதனை தொடர்ந்து நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் வெள்ளோடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்தது.
இந்த சம்பவம் நடந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் போலீசார் விசாரணையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்று வரும் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பெண் பிணங்கள் மிதந்து வந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. பெண்களின் பிணம் தொடர்ந்து மிதந்து வருவதால் அந்த பகுதி முழுவதிலும் அதிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.