சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்கள் ஐந்தாயிரம் ஹெக்டருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகரான சியோலிலும் சாலைகள் மற்றும் பாலங்கள் என சில பகுதிகள் சேதாரமடைந்துள்ளன. பாதுகாப்பாக மக்களை மீட்க அந்நாட்டு அரசாங்கம் 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் பாதுகாப்பு ஆணையம் தெரிவிகின்றன.