PCOD/PCOS நிரந்தரமாக குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை பலோ பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள உதவும் சிறந்த மூலிகை வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

தீர்வு 01:

செம்பருத்தி தேநீர்

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்

2)செம்பருத்தி இதழ் – 10

3)தேன் – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்தவும்.

பிறகு அதில் 10 செம்பருத்தி இதழை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் சினைப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:

கற்றாழை சாறு

1)தண்ணீர் – ஒரு கப்

2)சோற்றுக் கற்றாழை மடல் – ஒன்று

முதலில் கற்றாழை செடியில் இருந்து ஒரு மடலை கட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தோலை சீவிவிட்டு கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து ஒரு வடிகட்டி பருகி வந்தால் சினைப்பை நீர்க்கட்டி ஒரே மாதத்தில் கரைந்துவிடும்.

தீர்வு 03:

கறிவேப்பிலை நீர்

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்

2)கறிவேப்பிலை – ஒரு கொத்து

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.

இந்த நீரை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகினால் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு சரியாகும்.

தீர்வு 04:

மலைவேம்பு கஷாயம்

1)தண்ணீர் – ஒரு கப்

2)மலைவேம்பு – சிறிதளவு

மிக்சர் ஜாரில் சிறிதளவு மலைவேம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த வேம்பு சாறை அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.மலைவேம்பு இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாகவும் உருட்டி சாப்பிடலாம்.