கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!!

கருமையான உதடு சிவக்க இந்த முறையை பாலோ செய்யுங்கள்!!

நம்மில் பல பேர் உதடுகள் கருமையாக,பொலிவிழந்து காணப்படும்.இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி உதட்டின் மேல் அப்ளை செய்கிறோம்.இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். இந்நிலையில் இயற்கையான பொருட்களை வைத்து கருமையான உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்றி பொலிவானதாக மாற்ற முடியும்.

தேவையான பொருட்கள்:-

*புதினா சாறு – 1 தேக்கரண்டி

*பீட்ரூட் சாறு – 1 தேக்கரண்டி

*மாதுளை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.முதலில் புதினா இலைகளை சுத்தமாக அலசி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.

2.அதேபோல் பீட்ரூட் மற்றும் மாதுளம் பழத்தை தனி தனியாக மிக்ஸி ஜார் போட்டு அரைக்கவும்.பின்னர் அதன் சாற்றை பவுலுக்கு மாற்றி கொள்ளவும்.இந்த மூன்று ஒன்றாக கலந்து உதட்டில் பூசி வந்தால் கருமையான உதட்டில் மாற்றம் தென்படும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உதட்டின் மேல் காணப்படும் இறந்த செல்கள் அழிந்து விடும்.இதனால் உதடு பொலிவாகவும்,அழகாகவும் காணப்படும்.

கருமையான உதடு சிவக்க மற்றொரு வழி:-

*அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு உளுத்தம் பருப்பை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் சிறிதளவு தேன் கலந்து உதட்டின் மேல் தடவவும்.இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.