முன் நெற்றி முடியை வளர வைக்க இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!! 30 நாளில் தீர்வு கிடைத்து விடும்!!

Photo of author

By Divya

முன் நெற்றி முடியை வளர வைக்க இந்த முறையை பின்பற்றி பாருங்கள்!! 30 நாளில் தீர்வு கிடைத்து விடும்!!

முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கினால் நம் முக அழகு பாதிக்க தொடங்கி விடும்.இந்த முன் நெற்றி உதிர்வு மன அழுத்தம்,தூக்கமின்மை,வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றம் போன்றவைகளால் ஏற்படுகிறது.இந்த முன் நெற்றி முடி உதிர்வு பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்கு இயற்கை முறை வழி சிறந்த ஒன்றாகவும்,எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மருதாணி இலை பொடி – 1 தேக்கரண்டி

*கருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி

*நெல்லிக்காய் பொடி – 1 தேக்கரண்டி

*செம்பருத்தி இலை பொடி – 1 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

*தேங்காய் பால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி மருதாணி இலை பொடி,1 தேக்கரண்டி செம்பருத்தி இலை பொடி மற்றும் 1 தேக்கரண்டி நெல்லிக்காய் இலை பொடி சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் நல்லெண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து எடுத்து வைத்துள்ள கருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் 2 அல்லது 3 தேங்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த தேங்காய் பாலில் இருந்து 2 தேக்கரண்டி அளவு எடுத்து தயாரித்து வைத்துள்ள நல்லெண்ணெய் கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.

இந்த ரெமிடியை இரவு தூங்கும்போது தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு தோடர்ந்து செய்து வருவதன் மூலம் முன் நெற்றி முடி உதிர்வு தடுக்கப்பட்டு அவை வளரத் தொடங்கும்.