டிப்ரசனில் இருந்து வெளிவர இதை ஃபாலோ பண்ணுங்க!!

0
180
#image_title

டிப்ரசனில் இருந்து வெளிவர இதை ஃபாலோ பண்ணுங்க!!

மன் அழுத்தம் என்பது அனைவருக்கும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை காரணமாக மன அழுத்தம் ஏற்படும். இந்த மன அழுத்தத்தை குறைக்க எளிமையான 10 வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த மன அழுத்தம் நமக்கு ஏற்படுவது எதனால் என்றால் நாம் விரும்பாத செயல்கள் நமக்கு நடக்கும் பொழுது ஏற்படுகின்றது. நாம் விரும்பிய நபர்களின் அன்பையோ அல்லது உறவையோ இழக்கும் பொழுதுநமக்கு மன அழுத்தம் ஏற்படுகின்றது.

நாம் எதிர் பார்த்த காரியங்கள் நடக்காமல் போகும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது. எதிர் பாராத சூழ்நிலைகளை சந்திக்கும் பொழுது மன அழுத்தம் ஏற்படுகின்றது. உடலில் நமக்கு ஏற்படும் நோய்களை விட மன அழுத்தம் மிகவும் கொடுமையானது.

 

மன அழுத்தம் உள்ளவர்கள் அவர்களை எந்தவொரு விஷயம் அவர்களின் மனதை பாதிக்கின்றதோ அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். தூக்கம் இல்லாமல் இருப்பது, எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது, எந்தவொரு வேலையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பது, நியாபக மறதி, தாழ்வு மனப்பாண்மை, தனியாக இருப்பதை விரும்புவது போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளை மன அழுத்தம் இருப்பவர்கள் சந்திப்பார்கள்.

அது மட்டுமில்லாமல் நாட்கள் செல்ல செல்ல இதய பலவீனம், பயம், பதற்றம், இதயம் வேகமாக துடிப்பது, செரிமாண பிரச்சனை, இரத்த அழுத்தம் அதிகரிப்பது, முடி கொட்டுதல் போன்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள். இந்த பதிவில் இந்த பிரச்சனைகளை ஏற்படாமல் தடுக்க எளிமையான 10 வழிமுறைகளை பற்றி பார்க்கலாம்.

 

மன அழுத்தத்தை குறைக்க 10 வழிமுறைகள்…

 

1. வாய் விட்டு சிரிக்க வேண்டும். மன அழுத்தம் அதிகம் உள்ள சூழ்நிலையில் வாய் விட்டு சிரிப்பது கடினம் தான். இருந்தாலும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப மன அழுத்தத்தின் வேகம் குறைந்து மன அழுத்தமும் குறையத் தொடங்கும். மூளையில் மகிழ்ச்சியை தரக்கூடிய ஹார்மோன்களை உருவாக்கும். மன அழுத்தம் இருக்கும் பெழுது சிரிக்க முடியவில்லை சிரிப்பு வரவில்லை என்றால் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்க்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

 

2. செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடலாம். நம் மீது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த செல்லப் பிராணிகள் நம் மீது அன்பு செலுத்தும். செல்லப் பிராணிகளை நாம் கொஞ்சும் பொழுதும் அதனுடன் விளையாடும் பொழுதும் மன அழுத்தம் குறையும். மன அழுத்தத்தால் பாதித்தவர்கள் அதை சரிசெய்ய நாய், பூனை, வெள்ளை எலி, பறவைகள் போன்றவற்றை செல்லப்பிராணிஙளாக வளர்க்கலாம்.

 

3. மன அழுத்தத்தை குறைக்க நடைபயிற்சி செய்யலாம். நடை பயிற்சி மேற்கொள்ளும் பொழுது மூளையில் மகிழ்ச்சியை தரக்கூடிய ஹார்மோன்களை உருவாக்கி மன அழுத்தத்தை உருவாக்ககூடிய ஹார்மோன்களை கட்டுப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கின்றது. மன அழுத்தம் உள்ளவர்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவது மூலமாகவும், சைக்கிள் ஓட்டுவது மூலமாகவும் நடைப் பயிற்சியை குறைக்கலாம்.

 

4. உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம். உங்கள் மனதிற்கு பிடித்த பாடல்களையோ அல்லது ஆறுதல் தரக்கூடிய பாடல்களையோ கேட்பது மூலமாகவும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

 

5. நன்கு தூங்க வேண்டும். பொதுவாக மன அழுத்தம் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பதால் ஏற்படுகின்றது. இதனால் மன அழுத்தத்தை குறைக்க நன்கு தூங்க வேண்டும். மன அழுத்தம் இருப்பவர்கள் 8 முதல் 10 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும். ஆழ்ந்த உறக்கம் மன அழுத்தத்தை குறைக்கும்.

 

6. எதாவது ஒரு வேலையில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலமாக மன அழுத்தத்தை நாம் குறைக்கலாம். அதாவது மனதை பாதிக்கும் பிரச்சனையை பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்கும் பொழுது மன அழுத்தம் அதிகமாகின்றது. இதை தவிர்க்க மனதை எதாவது ஒரு வேலையில் அதிக கவனம் செலுத்தலாம்.

 

7. இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். பொதுவாக எல்லா வகை உயிரினங்களும் இயற்கையோடு சேர்ந்து இருப்பதற்காக படைக்கப்பட்டது. ஆனால் நாம் வசதிக்காகவும் நம் தேவைக்காகவும் இயற்கையோடு இணைந்து வாழாமல் இருக்கின்றோம். இந்த சூழ்நிலையும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதை தவிர்க்க வாரம் ஒருமுறை இயற்கையுடன் நேரத்தை செலவிடலாம்.

 

8. மன அழுத்தத்தை குறைக்க பொழுதுபோக்கு காரியங்களை செய்யலாம். எடுத்துக்காட்டாக வரைவது, இசைக் கருவிகளை வாசிப்பது, வீட்டில் தோட்டம் வைப்பது போன்ற ஏதாவது ஒரு செயலில் கவனத்தை செலுத்தி ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இதன் மூலமாகவும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

 

9. மன அழுத்தத்தை குறைக்க ஆழ்ந்த மூச்சு பயிற்சியை செய்யலாம். மன அழுத்தம் அதிகமாகும் பொழுது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை செய்யலாம். காலையில் எழுந்தவுடன் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மன கவலைகள் இன்றி வாழமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. இதனால் தினமும் இந்த மூச்சுப் பயிற்சியை செய்தால் மன அழுத்தம் குறைவதோடு கவலைகள் எதுவும் இன்றி வாழலாம்.

 

10. மன அழுத்தத்தை குறைக்க யாருடனாவது மனம் விட்டு பேசலாம். மன பாரத்தினால் அவதிப்படுபவர்கள் தங்களது மன வேதனைகளையும் மன கவலைகளையும் உங்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள உண்மையான நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ மனம் விட்டு பேசலாம். இதனாலும் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

 

மேற்கூரிய 10 வழிமுறைகளை செய்து பார்த்தால் நமக்கு மன அழுத்தம் என்ற ஒரு பிரச்சனையே இருக்காது. இந்த வழிமுறைகளை பின்பற்றி மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழலாம்.

Previous articleஇனி கண்ணாடி தேவையில்லை!! கழுகு போல பார்வை தெரிய இந்த கீரை ஒன்றே போதும்!! 
Next articleஇந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!