கொரோனா நோயாளிகள் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும்

Photo of author

By Parthipan K

கொரோனா நோயாளிகள் என்னென்ன உணவுகள் உட்கொள்ள வேண்டும்

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.இந்த நோயால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடிய வைரஸ் நம் உடலில் உள்ள செல்களில் புகுந்து நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கிறது. நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தினால் மட்டுமே நம் பொன்னான உயிரைக் காக்க முடியும்.

கொரோனாவினால் பாதி்க்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு அங்கு என்ன என்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதைக் குறித்து இதில் விரிவாகக் காண்போம் .

காலையில் ஏழு மணிக்கு இஞ்சி எலுமிச்சைச்சாறு உப்பு வெந்நீரில் சேர்த்துத் தரப்படுகிறது. எட்டு மணிக்கு இட்லி சாம்பார் அல்லது வெங்காயச்சட்னி சம்பா ரவை கோதுமை உப்புமா பால் இரண்டு முட்டை மற்றும் பழரசம்.

பதினோரு மணிக்கு இஞ்சி எலுமிச்சைச்சாறு உப்பு கலந்த வெந்நீர் மற்றும் சாத்துகுடி ஜூஸ்.மதியம் ஒரு மணிக்கு இரண்டு சப்பாத்தி புதினா சாதம் ஒரு கப் வேக வைத்தக் காய்கறிகள் ஒரு கப் மிளகு ரசம் ஒரு கப் மற்றும் உடைத்தக் கடலை ஒரு கப்.

மதியம் மூன்று மணிக்கு இஞ்சி மஞ்சள் உப்பு கலந்த வெந்நீர் தரப்படுகிறது.மாலை ஐந்து மணிக்கு உடலுக்குச் சத்தானக் கொண்டைக்கடலைச் சுண்டல் தரப்படுகிறது.

இரவு ஏழு மணிக்கு இரண்டு சப்பாத்தியுடன் இட்லி அல்லது சம்பா ரவை கோதுமை உப்புமா சாம்பார் அல்லது வெங்காயச் சட்னி பால் மற்றும் முட்டை வழங்கப்படுகிறது.
இது போன்ற நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால் தான் கொரோனாவின் தாக்குதலில் இருந்து வெளியே வர முடியும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்தி விடுங்கள். அது கொரோனா தொற்றுள்ள நபருக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இஞ்சி தற்போது அதிக அளவில் மலிவு விலையில் கிடைக்கிறது.இஞ்சித் துவையல் செய்து தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. நம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மிளகு இஞ்சி மஞ்சள் போன்றவைகளை நம் முன்னோர்கள் தங்கள் சமையலில் சேர்த்துச் சமைத்தனர். ஆனால் நாமே இன்று நாகரிகம் என்றப் பெயரில் பீட்சா பர்கர் பன்னீர் பட்டர் மசாலா போன்ற உணவு வகைகளுக்கு மாறியிருக்கிறோம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாகக் கொடுங்கள். கொரோனா வைரஸ் பாரம்பரிய உணவின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆகவே நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் இஞ்சியும் மஞ்சளும் சேர்த்துக் கொண்டாலே கொரோனாவின் தாக்குதலில் இருந்துத் தப்பிக்க இயலும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்போம் கொரோனாவை வெல்வோம்.