நமது சருமத்தை பாதிக்கும் உணவுகள்!!! இதையெல்லாம் இனிமேல் சாப்பிடாதீங்க!!!
நாம் உண்ணும் பல வகையான உணவுகள் நமது சருமத்தில் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் நமது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் நமது உடலில் உள்ள பகுதிகளில் அதிக முக்கியத்துவம் கெடுப்பது நமக்கு அழகு சேர்க்கும் முகத்திற்குத்தான். இதை பாதுகாத்து பராமரிக்க பலவகையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். குறிப்பாக பெண்கள் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகளை மறைக்க பல வகை மேக்கப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயம் நாக்கிற்கு கிடைக்கின்றது விதவிதமா விற்பனை ஆகின்றது என்று பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். இதனால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களின் சருமத்திற்கும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்த பதிவில் சரும பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சரும பாதிப்புகளை ஏற்படுத்தும் உணவுகள்…
* செயற்கையான இனிப்புகள் அதாவது வெள்ளை சர்க்கரை போன்ற இனிப்புகள் நம்முடைய தில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடும் பொழுது சருமத்தில் நீர் சேர்ந்து முகம் வீக்கம் அடைகின்றது.
* காரம் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு முகத்தில் சிவப்பு திட்டுக்கள் காணப்படும். குறிப்பாக ரோசாசியா பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.
* கிளூட்டன் சத்து உள்ள உணவுகளை அதிமாக எடுத்துக் கொள்ளும் பொழுது முகப்பருக்கள், முகத்தில் திட்டுக்கள் ஏற்படும். கோதுமை, கம்பு, பிஸ்கட், ரஸ்க், ரவை, பார்லி, பிரட், ஓட்ஸ் போன்ற தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
* அதிகப்படியாக ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் பொழுது முகம் வீங்கத் தொடங்கும்.
* காபித் தூள் சருமத்திற்கு நன்மைகள் தரும் என்றாலும் காபியை தொடர்ந்து குடிக்கும் பொழுது சருமத்திற்கு வறட்சியை அளிக்கின்றது.
* பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடும் பொழுது முகத்தில் பருக்கள் வரும். மேலும் இது சருமத்திற்கு நல்லது அல்ல.
* பால் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சாப்பிடும் பொழுது முகத்தில் பருக்கள் ஏற்படும்.
* இனிப்பு வகைகளை தொடர்ந்து அதிகமாக உட்கொள்ளும் பொழுது நமது சருமத்தில் அழற்சி ஏற்படும்.