தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!

0
110
#image_title

தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!

*தேள் கடி வலி குறைய ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதை உடலில் தேள் கடித்த இடத்தில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம்
தேள் கடி வலி மெதுவாக குறையத் தொடங்கும்.

*தேள் கடித்தவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒரு கிளாசில் சாறு பிழிந்து கொள்ளவும்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து பருகினால் தேள் கடி விஷம் முறியும்.

*அதேபோல் எலுமிச்சம் பழ சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி தேள் கடித்த இடத்தில் பூசினால் தேள் கடி குணமாகும்.

*ஒரு காட்டன் துணி எடுத்து அதில் நாட்டு வெல்லம் + சுண்ணாம்பு + புகையிலை உள்ளிட்ட மூன்றையும் சேர்த்து தேள் கடித்த இடத்தில் கட்டி விட்டோம் என்றால் தேள் கடி பாதிப்பு குறையும்.

*அதேபோல் சமயலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள கொட்டையை எடுத்து தரையில் தேய்த்து சூடு படுத்தி அதை தேள் கடித்த இடத்தில் வைத்தால் அவை ஒட்டிக்கொள்ளும்.பின்னர் தேளின் விஷம் அந்த புளியங்கொட்டையில் இறங்கி அவை கீழே விழுந்து விடும்.

*மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை இரண்டு எடுத்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.இதில் இருந்து சாறு எடுத்து சிறிதளவு தேள் கடித்த இடத்தில் தடவி விடவும்.மீதி இருக்கும் வெற்றிலை சாற்றை பருகவும்.இவ்வாறு செய்வதன் மூலம் தேள் கடி விரைவில் குணமாகும்.

*அதேபோல் 1 பூண்டு எடுத்து தோல் நீக்கி மைய்ய அரைத்து கொள்ளவும்.இதை தேள் கடித்த இடத்தில் வைத்து நன்கு தேய்க்கவும்.இவ்வாறு செய்தால் தேள் கடி விஷம் உடனடியாக குறையும்.அதுமட்டும் இன்றி சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் சிறிதளவு எடுத்து தண்ணீர் கொஞ்சம் ஊற்றி தேள் கடித்த இடத்தில் பூசினால் தேள் கடி வலி குறையத் தொடங்கும்.