அடி தூள்! ரஜினியின் ஜெயிலர் செய்த புதிய சாதனை.. என்னனு தெரியுமா?

Photo of author

By Divya

அடி தூள்! ரஜினியின் ஜெயிலர் செய்த புதிய சாதனை.. என்னனு தெரியுமா?

Divya

அடி தூள்! ரஜினியின் ஜெயிலர் செய்த புதிய சாதனை.. என்னனு தெரியுமா?

தமிழில் டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படம் ‘ஜெயிலர்’.சன் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.நடிகர் ரஜினியை தவிர்த்து மோகன்லால்,சிவ ராஜ்குமார்,ஜாக்கி ஷெராப்,சுனில்,தமன்னா,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,விநாயகன்,வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியானது.

ஜெயிலர் படத்தின் பட்ஜெட் ரூ.200 முதல் ரூ.240 கோடி வரை என்று சொல்லப்படும் நிலையில் அதன் வசூல் சுமார் 630 கோடியாக இருக்கின்றது.சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான படங்களில் இந்த ஜெயிலர் படம் தான் அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறது.இதனால் படத்தின் வெற்றிக்கு காரணமான ரஜினி,இயக்குநர் நெல்சன்,இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவருக்கும் காசோலை மாற்றும் விலையுயர்ந்த சொகுசு கார்களை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் தற்பொழுது Amazon Prime டாப் 10 படங்களின் “ஜெயிலர்” 2வது இடத்தில் பெற்றுள்ளது என்றும் 35 நாடுகளில் இப்படம் டிரெண்டிங்கில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.