பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

0
42
#image_title

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த ,மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது,அதை ஒழிக்க வேண்டுமென்று கூறினார்.அதாவது கொசு,டெங்கு காய்ச்சல்,மலேரியா,கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டுமென்றும் அது தான் நாம் செய்யும் முதல் பணியாக இருக்க வேண்டுமெறும் கூறினார்.

இவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு நாடு முழுவதும் இருக்கின்ற இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள்,இந்து அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சனாதன கருத்துடைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயை பரவி வருகிறது.தமிழக அரசின் அறவியலும் இந்திய பண்பாடும் என்ற +2 பாட புத்தகத்தின் 58வது பக்கத்தில் “இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில்,து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.

ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால்,அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி,அகற்ற முன் வருபவனே இந்து ஆவான்.அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.இந்து சமயம்,சனாதன தருமம்,வேத சமயம்,வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்” என்ற கருத்து அதில் இடம் பெற்றுள்ளது.இது சனாதனத்திற்கு ஆதரவான கருத்தாக இருக்கிறது.இந்நிலையில் தற்பொழுது இந்த பாட புத்தகத்தில் இடம் பெற்றிருந்த சனாதன தருமம் குறித்த விளக்கம் கொண்ட புகைப்படத்தை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.