சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனைத்து வயது பெண்களும் எந்தவித தடையுமின்றி கோவிலுக்கு சென்று வழிபடலாம் என 2018 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபடவில்லை.தற்போது தான் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில் பக்தர்கள் மாலை அணிய தொடங்கி உள்ளனர்.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஐயப்பன் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பு வானிலை மையம் அறிவித்துள்ள அறிவிப்பை பார்த்து வரவேண்டும்.
அதனையடுத்து கோவிலுக்குள் பிளாஸ்டி பொருட்கள் கொண்டு வரவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.தற்போது சபரிமலையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 1000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் பாதுகாப்பிற்கு போலீசார்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆகையால் பக்தர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.