சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
180

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்உலகில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து அதிக அளவு பக்தர்கள் மாலை அணிந்து வரும் கோவில் என்றால் அவை சபரிமலை தான்.இந்நிலையில் மகர தீபத்தை முன்னிட்டு கார்த்திகை 1 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1 ஆம் தேதியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாகவே ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தருவதற்கு கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.மேலும் நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleபயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!
Next articleவிஜய் ஆண்டனி படத்திற்கு சிக்கலா ? படக்குழுவினரை கைது செய்த போலீசார் !