பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

0
82

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை, 15ஆம் தேதி தைப்பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி உழவர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

 

அதனால் வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் மக்கள் அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

 

தமிழகத்தில் பொதுவாக 300 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பயணிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் ஜனவரி 11 ஆம் தேதி அன்று பயணம் செய்ய விரும்புவர்கள் நேற்று முதலே முன்பதிவு தொடங்கியுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் முன்பதிவு செய்யலாம் எனவும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K