இவர்களுக்கு இனி ரூ 1000 லிருந்து ரூ 3000 ஆக ஓய்வூதியம் உயர்வு! தமிழகத்தில் இன்று முதல் அமல்!
தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நடந்து முடிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பட்ஜெட் கூட்டு தொடரில் ரூ.1000 திலிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறினர். ஆரம்ப கட்டக்காலத்தில் ,தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மாதம் 500 வழங்கப்பட்டு வந்தது.
பின்பு அதிலிருந்து உயர்த்தி ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய பரம்பரை சித்த மருத்துவர்களுக்கு ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது உள்ள பொருளாதார சூழலில் இத்தொகை போதுமானதாக இல்லை என கூறி ஓய்வூதியத்தை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று பட்ஜெட் கூட்டு தொடரில் ஆயிரத்திலிருந்து ஓய்வூதியத்தை 3000 ஆக மாற்றி அறிவித்தது. அந்த வகையில் இன்று தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்த 60 வயதிற்கும் மேற்பட்ட பரம்பரை மருத்துவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ஆயிரத்திலிருந்து 3000 ஆக வழங்கப்படும் என ஆணை வெளியிட்டுள்ளனர்.