தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்!

தமிழக ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் வைக்கப்படுமா:? கூட்டுறவு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனின் பதில்!

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று திருச்சி அண்ணா நகரில் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கிவிட்டு பின்பு வாகனத்தில் வங்கி இயக்கத்தை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து நுகர்பொருள் கிடங்கை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கௌரவ அட்டையை குறித்து விளக்கம் அளித்தார் ராதாகிருஷ்ணன்.இதன் பிறகு தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, ராதா கிருஷ்ணன் அவர்கள் ரேஷன் கடைகளில் பிரதமரின் படம் வைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கிடையே ஓர் வரைமுறையுள்ளது அதை பற்றி தற்போது பேச வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.மேலும் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தின் 75 இடங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றி அமைக்கப்படும் என்றும்,மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரேஷன் கடைகள் கட்டப்பட்டு அதில் கழிவறை மற்றும் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளுக்கு ஏற்ப புதிய ரேஷன் கடைகள் கட்டப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.