சென்னை அணியில் முதல் இரண்டு போட்டியில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள்

Photo of author

By Parthipan K

இந்த வருடம் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடத்த முடியாது சூழ்நிலை எற்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். இந்த நிலையில்  போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட்,  ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன்  ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிந்த பிறகே அணியோடு இணைந்து கொள்வார்கள். இருவரும் வருகிற 17-ந்தேதி துபாய் வருவார்கள் என்று சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.