முன்னாள் துணை முதல்வரின் தம்பி கட்சியிலிருந்து நீக்கம்! அதிமுகவில் தொடரும் சர்ச்சை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு கட்சியின் நிலை இல்லாமல் போனது. கட்சிக்குள்ளேயே பிரிவினை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அப்பொழுதிலிருந்தே மக்களுக்கு அதிமுக கட்சியின் மீது இருந்த மரியாதை குறையத் தொடங்கிவிட்டது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இன்றி போட்டியிட ஆரம்பித்துவிட்டனர். அதன் தாக்கம் தற்பொழுது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை தருகிறது. முதலில் சசிகலாவை கட்சிக்குள் வைத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளை தன்வயப்படுத்தி கொண்டனர்.
பிறகு சசிகலா விட்டு விலகி அவரவர்க்கு என்று தனிக் கட்சியை ஆரம்பித்து விட்டனர். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது இவர்களின் கட்சி பிரிவினை எதிர்க்கட்சிக்கு பெரும் சாதகமாக அமைந்தது. பிறகு கட்சியை பங்கு போட வேண்டாம் என்று எண்ணி சசிகலா கட்சியில் இருந்து விலகினார். அதற்கடுத்து ஆன்மீகம் சம்பந்தமாக தற்போது வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு இருக்கையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அவர்கள் பெரும் நிபந்தனைகளை கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் போட்டனர். அது என்னவென்றால், கட்சியின் உறுப்பினர்கள் யாரும் சசிகலாவை சந்திக்க கூடாது. அவரை சந்தித்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக படுவார் என கூறியிருந்தனர்.
அவர் கூறியிருந்த நிலையிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கையில் பல அதிமுக உறுப்பினர்கள் மறைமுகமாக சசிகலாவை சந்தித்து பேசினர். அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து விலகினர். இவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர்களாக கட்சியிலிருந்து விலக ஆரம்பித்தனர். தற்பொழுது ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் மற்றும் தேனி மாவட்ட ஆவின் தலைவருமான ராஜா அவர்கள் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பு நிலவியது. இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கட்சிக் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.ராஜா அவர்களை நீக்கி வைப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறான சர்ச்சைகள் தொடர்ந்து அதிமுகவில் நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.
சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டுமே அதிக அளவு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஓ பன்னீர்செல்வம் பெருவாரியாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இவரது தம்பி சசிகலாவை சந்திப்பதற்கு ஏதேனும் பின்னணியில் காரணம் இருக்குமோ என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அல்லது தனக்கு பதிலாக தம்பியை அனுப்பி ஓபிஎஸ் பேச வைத்தார் என்றும் பலர் கூறுகின்றனர். இவரது தம்பியை கட்சியில் இருந்து நீக்குவது போல் தற்காலிகமாக நீக்கிவிட்டு மீண்டும் கட்சியில் இணைத்து விடுவார்கள் என்றும் கூறுகின்றனர்.