கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

Photo of author

By Preethi

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

இந்தியாவில் இதுவரையில் 37.63 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள். குறைந்தது 30.30 கோடி மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,33 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 12 லட்சம் மக்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திங்கள் கிழமையான நேற்று 40 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் (டெல்லி, ஒடிசா, பஞ்சாப், மத்தியபிரதேசம்) கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுவிட்டன. தலைநகரான டெல்லியில் நேற்று 36,310 மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அங்கு தினமும் சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நேற்று 36 ஆயிரமாக அது குறைந்தது. இன்று டெல்லியில் தடுப்பூசி போட தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் அங்கு 90% முகாம்கள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி கொள்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. இந்தியாவில் உள்ள 18+ வயத்துள்ள அனைவருக்கும் டிசம்பர் 2021க்குள் கொரோனா தடுப்பூசி போட முடியும் என்பது வெறும் ஆடம்பர பேச்சு. இந்தியாவின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கொரோனா தடுப்பூசி தொடர்பான உண்மையை மக்களுக்கு தெரிவிப்பாரா? என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.