டோனியை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அதிர்ச்சி தகவல்

0
194

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்  டோனியின் திடீர் ஓய்வு குறித்து பேசும்போது டோனி போன்ற வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன். இந்திய அணிக்காக கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்ந்த நிலையில் விடைபெறவேண்டும் என்றே விரும்புவார்கள். நிச்சயம் டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கும். வழியனுப்பும் போட்டி நடத்தப்படாததால் அவரது ரசிகர்களும் வருத்தத்தில் இருப்பார்கள். டோனி கிரிக்கெட்டில் ஒரு மாணிக்கம். உண்மையான ஹீரோ. அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் ஐ.பி.எல். போட்டியில் களம் காண இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.

Previous articleசின்சினாட்டி டென்னிஸ் நட்சத்திர வீரர்கள் அதிர்ச்சி தோல்வி
Next articleஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகவும் கொடூரமானவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here