தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மிது வழக்கு பதிவு!

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி 16 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக 220 சதவீதம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்க பதிவு.

லஞ்சம் பெற்றுக் கொண்டு சொத்துக்களை குவித்ததால், யார் யார் லஞ்சம் கொடுத்தார்கள் லஞ்சத்தில் பங்கு பெற்றவர்கள் யார் என்பது குறித்து பட்டியலை தயாரிக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை வேளச்சேரி புதிய தலைமை காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம்.

ஐ.எப்.எஸ் அதிகாரியான இவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பதவி வகித்துள்ளார். கடந்த 2021 செப்டம்பர் மாதம் வெங்கடாச்சலம் ஓய்வுபெற இருந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணக்கில் காட்டப்படாத 13.5லட்சம் பணம், 11கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் 2 ஆம் தேதி வெங்கடாச்சலம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன் பின்பு இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் 16 மாதங்களுக்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கண்ட போது பறிமுதல் செய்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி வசந்தி மகன் விக்ரம் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட வெங்கடாசலம் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவிக்காலம் முடியும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு கீழ் வேலை பார்க்கும் பார்க்கும் ஊழியர்களுடன் சேர்ந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சொத்துக்களை கணக்கிட்டு பார்க்கும் பொழுது, 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 57 லட்சத்து 63 ஆயிரத்து 93 ரூபாய் சொத்துக்களை வெங்கடாசலம் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருந்தது. 2018 ஆம் ஆண்டில் வெங்கடாசலத்தின் சொத்து மதிப்பு ஒன்பது கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 527 ரூபாய் என தெரியவந்துள்ளது.

வெங்கடாஜலத்திற்கு இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்ற வருமானம் 3 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 528 ரூபாய் ஆகும். இந்த காலகட்டத்தில் செலவு என்று பார்க்கும் பொழுது ஒரு கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 580 ரூபாய் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் வெங்கடாசலம் அவரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கிட்டு பார்க்கும் பொழுது அதன் மதிப்பு எட்டு கோடியே 54 லட்சத்து 1624 ரூபாய் என தெரியவந்துள்ளது.

இவ்வாறாக வரவு செலவு மற்றும் சேமிப்பு கணக்குகளை பார்த்து வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு என்று பார்க்கும் பொழுது
வருமானத்திற்கு அதிகமாக 220 சதவீதம் சொத்துக்களை குவித்ததாக தெரியவந்துள்ளது. சுமார் 6 கோடி 85 லட்சத்து 37 ஆயிரத்து 676 ரூபாய் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் ஈஞ்சம்பாக்கத்தில் 6525 சதுர அடியில் நிலத்தை 23 லட்சத்திற்கு வாங்கியதாக நீலாங்கரை சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் உள்ள சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து மஞ்சொளிப்புத்துறை ஆய்வு செய்ததில் கிருஷ்ணகிரி விழுப்புரம் ஜோலார்பேட்டை நெற்குன்றம் ஆகிய பகுதிகளில் எட்டு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ள காரணத்தினால் இந்த சொத்துக்களுக்கான மூலதனம் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்தும் வெங்கடாசலத்தில் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பேரில் உள்ள வங்கிக் கணக்குகளில் நடைபெற்ற பரிவர்த்தனை ஆகியவற்றை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையின் மூலம் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்திற்கு லஞ்சமாக பணம் கொடுத்தவர்கள் மற்றும் அவரிடமிருந்து லஞ்சப் பணத்தை பங்கு பெற்றவர்கள் உள்ளிட்டோர் தகவல் வெளியாகும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.