சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு 

0
224
#image_title

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு

சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையோரம் உள்ள மீன் கடைகளை அகற்றியதை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நேரில் சென்று ஆதரவு அளித்து பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் : கடற்கரைக்கு முன் மீன்கள் விற்கக்கூடாது என கூறிய அரசு, கடலுக்குள் பேனா எப்படி வைக்கும்?

#image_title

திடீரென மீன்கள் விற்ககூடாது என சொன்னால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியாத.

இரண்டு நாட்களாக இங்கே போராடி கொண்டு இருக்கும் மக்களின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?

வடமாநிலத்தில் இருந்து, இங்கே வந்து வேலை செய்தவர்களை அடித்த சம்பவம் குறித்து, வடமாநிலத்தவர்களுக்கு ஆதரவாக பேசியவர்கள், தமிழனின் நிலையை கண்டுக் கொள்ளாமல் இருப்பது சரியா.

இங்கே இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என,  நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியபோது. அதை மேல் முறையீடு செய்ய சொல்லி எந்த வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காமல் இருப்பது ஏன்.

நீதிபதிகளும் அதை மறுபரி சீலனை செய்யமால், கடைகளை அகற்ற சொல்லி தானே உத்தரவிட்டுள்ளது.

இதையெல்லாம் சரியாக விசாரணை செய்யாத நீதிமன்றம். கடலுக்கு நடுவே பேனாவையும், சமாதியையும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க காரணம் என்ன.

சமாதி கட்டுவது தான் முக்கியம் என நினைக்கும் உங்களுக்கு, ஏன் மீனவர்களின் வயிற்று பசி புரியவில்லை.

சாலையோரத்தில் கடை இருப்பது தவறு என நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு மீன் சந்தை அமைத்துக் கொடுக்கலாமே, அதை ஏன் நீங்கள் செய்யவில்லை.

என்று பல கேள்விகளை முன் வைத்தே, அவர் பேசினார்.

author avatar
Jayachithra