பார்முலா1 கார்பந்தயம் இங்கிலாந்து வீரர் வெற்றி

0
138
ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்று நேற்று நடந்தது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் 307.104 கிலோமீட்டர் தூர இலக்கை 1 மணி 31 நிமிடம் 45.279 வினாடிகளில் கடந்து இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்று 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனான ஹாமில்டன் இந்த சீசனில் ருசித்த 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 24.17 வினாடி பின்தங்கிய மேக்ஸ் வெர்ஸ்டப்பென்  2-வதாகவும், வால்டெரி போட்டாஸ் 3-வதாகவும் வந்தனர். 7-வது சுற்று போட்டி வருகிற 30-ந்தேதி பெல்ஜியத்தில் நடக்கிறது.
Previous articleதூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடு?
Next articleசாதாரண எலக்ட்ரீசியன் பிரம்மாண்ட இயக்குனர் ஆனது எப்படி? ஷங்கர் பர்த்டே ஸ்பெஷல் Biopic