புதிய கூட்டணிக்கு அடித்தளம் .. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!!
தமிழகத்தில் அரசியல் சார்ந்த பல திருப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று அண்ணாமலை மற்றும் திருமாவளவன் நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். இது அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. சமீபத்தில் திமுக மற்றும் விசிக இடையே பிளவு ஏற்பட்டு விட்டதாக பல தகவல்கள் வெளியானது.
ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்து திருமாவளவன் முடித்து வைத்து விட்டார். இந்த வதந்தி பரவுவதற்கு முக்கிய காரணம், நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்திற்காக அன்பில் மகேஷ்யே எதிர்த்தனர்.இதற்கு பல கண்டனங்களும் எழுந்தது. இருப்பினும் மற்றொரு பக்கம் தேர்தல் சமயத்தில் அதிக அளவு சீட் கேட்டு கொடுக்க மறுத்ததும் கூட இருக்காலம் என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் திருமாவளவன் அவ்வபோது தமிழக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறார்.இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் வரும் பட்சத்தில் தமிழகத்தில் பல கூட்டணிகள் களைய அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியலில் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிந்த நிலையில், விசிக-விற்கு அதிகளவு சீட் கொடுத்து கூட பாஜக தங்கள் வசம் இழுத்து விடும் என கூறுகின்றனர்.
ஆனால் ஜாதிய வாரிய அடிப்படையில் கூட்டணி வைக்க பாஜக முட்டுக் கொடுக்குமா என்பது சற்று சந்தேகம்தான். இந்த சந்திப்பானது எதர்ச்சியாக நடந்ததா அல்லது திட்டமிட்டு அரசியல் ரீதியாக இருந்திருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மேற்கொண்டு இந்த சந்திப்பானது திருமாவளவன்,பங்காரு அடிகளாரின் இறப்பிற்கு அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து திரும்புகையில் நடந்துள்ளது.மேற்கொண்டு அண்ணாமலை மற்றும் மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் திருமாவின் நலனை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.