வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

0
55
Request to the Chief Minister for non-payment of insurance amount properly
Request to the Chief Minister for non-payment of insurance amount properly

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் 5 லட்சம் வரை மருத்துவ உதவியாகவும் மேற்கொண்டு அதீத செலவுகளுக்கு 20 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சை போன்ற இதர செலவுகளுக்காக மேற்கொண்டு 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்ற வரைமுறை உள்ளது.

இந்த திட்டமானது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்துடன் செயல்படுத்த  ஒப்பந்தம் செய்தனர்.ஆனால் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது முதல் ஊழியர்களிடமிருந்து பல புகார்கள் வந்த வண்ணமாகவே உள்ளது.மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவிற்காக இந்த திட்டத்தினை நாடினால் உரிய தொகை எதுவும் வழங்கப்படுவதில்லையாம்.எனவே இதுகுறித்து தற்பொழுது ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாதம் தோறும் அரசு ஊழியர்களின் வருமானத்திலிருந்து ரூ.300 பிடிக்கின்றனர். ஆனால் அதற்கேற்ற எந்த ஒரு பயனையும் நாங்கள் அனுபவிப்பதில்லை. எனவே இந்த பொதுத்துறை நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருப்பதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்கான உரிய பணத்தை வழங்காமல் 25% வரையே இந்த காப்பீட்டு நிறுவனம் தங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பல ஊழியர்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே தங்களின் இந்த குறைகளை நிவர்த்தி செய்து தமிழக அரசு இனிவரும் காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தார்கள் என அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சையை அளிக்க உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில அரசானது இவ்வாறு தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துக்கொண்டு அரசு ஊழியர்களின் பணத்து சுருட்டுவதுடன் அவர்களின் மருத்துவ செலவீனங்களுக்கான பணத்தை அளிக்காமல் இருப்பதை கண்டு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.