பற்களை பாதுகாக்க நான்கு டிப்ஸ்! கண்டிப்பாக நீங்களும் ட்ரை செய்யுங்கள்!

Photo of author

By Parthipan K

பற்களை பாதுகாக்க நான்கு டிப்ஸ்! கண்டிப்பாக நீங்களும் ட்ரை செய்யுங்கள்!

பொதுவாக ஒருவருக்கு முகத்தில் அழகு என்பது அவர்களின் பற்களால் கூட வெளிப்படும். அவ்வாறு அழகை வெளிப்படுத்த உதவும் பற்களை நாம் எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

பற்களை பாதுகாக்க உதவும் பொருட்கள்:

எலுமிச்சை சாறு

கேரட்

ஆரஞ்சு தோல்

புதினா இலை

நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பொழுது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் உள்ள கிருமிகள் நீங்கி கறைகளும் மறைய தொடங்கும்

கேரட் பற்களை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் ஒரு நாளில் இரண்டு கேரட் அல்லது மூன்று கேரட் பச்சையாக மென்று சாப்பிட்டால் பற்கள் வலுவடைகிறது. அதனுடன் பற்களில் ரத்தக்கசிவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு தோல்: ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது ஆரஞ்சு தோலை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்தால் பற்கள் பளிச்சென்று மாறிவிடும்

புதினா இலை:வாரத்திற்கு ஒரு முறை புதினா இலைகளை நன்றாக காய வைத்து அதனை பொடி செய்து அந்த பொடியினை கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களின் உள்ள கிருமிகள் மற்றும் துர்நாற்றம் ஏற்படுவது குறையும்.