நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.