மணமணக்கும் கொத்தமல்லி சட்னி!! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!

Photo of author

By Divya

மணமணக்கும் கொத்தமல்லி சட்னி!! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!

நம் உணவில் மணத்தை கூட்டும் கொத்தமல்லியை வைத்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது.இந்த கொத்தமல்லி வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்ட அற்புத மூலிகை பொருளாகும்.இட்லி,தோசைக்கு இந்த கொத்தமல்லி தழைகளை வைத்து தயாரிக்கப்படும் சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி இலை – 1 கப்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பச்சை மிளகாய் – 5

*வர மிளகாய் – 2

*தக்காளி – 3

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*பூண்டு – 2 பற்கள்

*இஞ்சி – சிறு துண்டு

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பெருங்காயம் – 1 சிட்டிகை

*புளி – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு வாணாலி வைக்கவும்.அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,1/2 தேக்கரண்டி சீரகம்,புளி,2 பற்கள் பூண்டு மற்றும் இஞ்சி சிறு துண்டு சேர்த்து வதக்கவும்.பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து மீண்டும் வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.வதக்கி வைத்துள்ள கலவை நன்கு ஆறிய பிறகு
மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.பின்னர் அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி அவை சூடேறியதும் அதில் கடுகு 1/2 தேக்கரண்டி,கருவேப்பிலை 1 கொத்து மற்றும் வர மிளகாய் போட்டு பொரிய விடவும்.அடுத்து அடுப்பை அணைத்து தாளிப்பில் 1 சிட்டிகை அளவு பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளவும்.இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் சேர்த்து கலக்கி விடவும்.