போலீஸ் கமிஷனருக்கு வீடியோ காலில் மோசடி!! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம்!!

0
58
Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!
Fraud on video call to Police Commissioner!! Warning cybercrime!!

மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு இன்று காலை ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை மாவட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.

துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது வங்கி  கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவவை பார்த்த உடனே அழைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார் என துணை காவல் ஆணையர் ராஜேஷ் அவர்கள்

Previous articleமீண்டும் CSK திரும்பிய சுட்டி குழந்தை!! 3 ஆண்டுகளுக்கு பின் பேக் டூ ஹோம்!!
Next articleநடமாடும் மருத்துவ சேவைக்கு ரூ 64 000 சம்பளம்!! விண்ணப்பிப்பது எப்படி?