அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!!

0
162
Free bus pass for government school students!! Now you can apply on the app!!
Free bus pass for government school students!! Now you can apply on the app!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!! இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம். இதனை TNSED Schools என்ற ஆப்பின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றது.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.அவ்வாறு வழங்கப்படும் இலவச பேருந்து திட்டத்திற்கான பஸ் பாஸ் பெற இனி ஆப்பில் விண்ணப்பிக்கலாம்.

இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது. இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

பஸ் பாஸ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.அதனை போன்றே இந்த வருடம் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டு பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் இனி இலவச பஸ் பாஸை TNSED Schools என்ற ஆப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பிக்கும் அனைத்து  மாணவர்களின்  விவரங்களும் சரியாக உள்ளதா என்று தலைமை ஆசிரியர் சரி பார்க்க வேண்டும்.

இதில் மாணவரின் பெயர் ,வகுப்பு ,முகவரி .பஸ் வழித்தட எண் போன்ற அனைத்து விவரங்களையும் விண்ணப்பிக்க வேண்டும்.பின்னர் மாணவர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தலைமை ஆசிரியர் சரி பார்த்து அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்! பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பேட்டி!!
Next articleஇனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!