50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!!
தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் முன்னிலையில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே 5000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் நடைபெற உள்ள வேளாண் கண்காச்சியை வருகை தர உள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சி திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த நிகச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளது. மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படம் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.இதற்காக அரசின் எரிசக்தி மாநிலத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான நிதின் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது.
இலவச மின் இணைப்பு கோரி விண்ணபித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு மின் இணைப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே 1 லட்சத்தி 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.