வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

Photo of author

By Rupa

வெறியான தெருநாய்கள்! பசிக்கு இரையான மூதாட்டி!

தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை தீவிரமாக பரவி கொண்டு வரும் நிலையில் மக்கள் வீட்டினுள்ளே இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வயுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.ஓர் நாளில் மாட்டும் ஒவ்வோர் மாநிலத்திலும் பல ஆயிரம் கணக்கானோர் உயரிழந்து வருகின்றனர்.மத்திய மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.முதலில் கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.அதனைத்தொடர்ந்து ஆந்திரா,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து அத்தியாவசிய கடைகள் தவிர இதர கடைகள்  செயல்பட தடை விதித்துள்ளனர்.அதுமட்டுமின்றி மக்கள் வெளியே செல்வதும் தவிர்த்து வருவதால் வாயில்லா ஜீவன்கள் உணவின்றி தவித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் ராஜராஜெஷ்வரி தெருவில் வயதான மூதாட்டி ஒருவர் வீடு கூட இல்லாமல் சாலையோரங்களில் தங்கி வந்துள்ளார். அந்நிலையில் காலையில் அந்த மூதாட்டி பாதி உடம்போடு சாலையில் சடலமாக கிடந்துள்ளார்.அதனை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் அந்த பாட்டியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பிரேத பரிசோதனையில் அந்த மூதாட்டியை சிறுத்தை போன்ற மிருகம் கடித்துள்ளதாக கூறியுள்ளனர்.அதனையடுத்து பொதுமக்களிடையே போலீசார் விசாரிக்கும் போது தான் அந்த திடுக்கிடும் சம்பவம் தெரியவந்தது.அந்த தெருவில் அதிக படியான தெருநாய்கள் திரிந்து வந்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் அந்த நாய்களுக்கு உண்ணுவதற்கு உணவின்றி தவித்து வந்துள்ளது.

இரு நாட்கள் முன்னதாகவே தெருநாய்கள் அந்த மூதாட்டியை சூழ்ந்துள்ளது.அப்போது பொதுமக்கள் அந்த தெருநாய்களை விரட்டியுள்ளனர்.அதனையடுத்து இரவு நேரத்தில் யாரும் இல்லா நேரமாக பார்த்து அந்த தெரு நாய்கள் மூதாட்டியை கடித்து குதறியுள்ளது.அந்த மூதாட்டியின் வயது முதிர்ந்த காரணமாக அவரால் அசைய முடியவில்லை.அந்த மூதாட்டியை தெருநாய்கள் கடித்து அவரது பாகங்களை தின்று கொன்றுள்ளது.அவைகள் பசிக்கு மூதாட்டி இரையாகியுள்ளார் என்பது அப்பகுதியிடயே பெருமளவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.