இனி கைதிகளுக்கு தினந்தோறும் விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!!
தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கஞ்சி சாதம் போன்றவை வழங்கப்பட்ட வந்த நிலையில், அவர்களுக்கு எந்த ஒரு ஊட்டச்சத்தும் அதில் இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கோரிக்கை எடுத்து வந்தனர். இதனால் கைதிகளுக்கு வழங்கும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறினர்.
ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர் அதிகாரிகள் பலரும் தெரிவித்தனர். குற்றம் புரிந்தவர்களுக்கு இப்படிப்பட்ட உணவுகள் கொடுப்பதுதான் சரி என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே, எனவே அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்பொழுது அதனை தமிழக அரசு ஏற்றுள்ளது.
இனி சிறைச்சாலையில் அரிசி கஞ்சி சாதம் என்பது கிடையாது. சைவம் மற்றும் அசைவம் என்று இரு வகைகளிலும் தடபுடலான அறுசுவை விருந்து தான் என கூறியுள்ளனர். அந்த வகையில் ஏ வகுப்பை சேர்ந்த கைதிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் வழங்கப்படும். இதுவே பி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை அசைவம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல இதர நேரங்களில் காலை நேரத்தில் கோதுமை உப்புமா என தொடங்கி மதிய நேரத்தில் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் சப்பாத்தி, காய்கறி கூட்டு போன்ற விதவிதமான உணவுகள் இனிவரும் நாட்களில் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
அத்தோடு காலை மற்றும் மாலை என அனைத்து கைதிகளுக்கும் டீ அதனுடன் தின்பண்டமாக கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து மிக்க பயிர்வகைகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். அதேபோல அசைவம் பிடிக்காது நாங்கள் சைவம் மட்டும்தான் சாப்பிடுவோம் என்று கூறும் கைதிகளுக்கு நெய் என தொடங்கி காரக்குழம்பு, தயிர், வாழைப்பழம் வரை அனைத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
ஏ வகுப்பு மற்றும் பி வகுப்பு என்பதற்கு ஏற்ப உணவுகளில் சிறு சிறு மாறுதல்கள் இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த புதிய உணவு பட்டியலால் தமிழக அரசுக்கு வருடத்திற்கு 26 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.