இனி தமிழகத்தில் டெட்ரா பேக் மூலம் மது விற்பனை!! அமைச்சர் முத்துசாமி தகவல்!!
தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்ய ஆலோசனை செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிய அலுவலக கட்டிடத்தை மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி திறந்துவைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் போலி மதுபானங்கள் மற்றும் மதுவில் கலப்படம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆலோசனை நடத்த இருப்பதாக அவர் கூறினார்.
சில இடங்களில் இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு இருப்பதால் இவை அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் மதுபான கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல பிரச்சனை இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மேலும் கர்நாடகா ,பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் டெட்ரா பாட்டில்களில் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை சாலையில் வீசி செல்வதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என்பதால் இது விவசாயிகளுக்கு நன்மை அளிக்க கூடிய ஒன்றாகும்.இதனால் டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.