உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினையா.? இந்தப் பழத்தை சாப்பிட்டால் போதும்.!!

0
379
fruits-to-eat-to-cure-nervous-breakdown
fruits-to-eat-to-cure-nervous-breakdown

தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது நரம்புத்தளர்ச்சி தான்‌.

கை, கால் நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலை தடுமாற்றம் ஆகிய பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், நெல்லிக்காய் மற்றும் முருங்கைக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும்‌. எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல்கூட பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

மாதுளம் பழத்தை அதிகம் எடுத்துக் கொண்டால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனையே வராது. மாதுளம்பழம் உடல் சூட்டை தணிப்பதோடு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்கிறது. குறிப்பாக ஆண்மை குறைவு பிரச்சினைக்கு மாதுளம் பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

அத்திப்பழம் நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தி நரம்புகளை வலுப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான பலத்தையும் கொடுக்கிறது. வாரத்திற்கு 2 அல்லது 3 முறை அத்திபழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

உடலை வலுப்படுத்தும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி பிரச்சனையை முற்றிலும் சரியாகும். மேலும், உடலுக்கு எந்த நோயும் வராது.

உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் தனிமை பிரண்டை செடிக்கு உண்டு. பிரண்டையை ஊறுகாயாக அரைத்து உணவில் சேர்த்துக் கொள்வதினால் நன்றாக பசியெடுக்கும் செரிமான பிரச்சினை வரவே வராது. உடல் நரம்புகளை வலுப்படுத்தும்.

உடலை வலிமைப்படுத்தும் சக்தி முருங்கைக் கீரைக்கு உண்டு. நரம்புகளை வலுப்படுத்தும் தன்மையும் உண்டு. மேலும், இது ஆண்மை பிரச்சனையையும் சரி செய்கிறது. முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.

Previous article“இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து சிக்கலில் சிக்கிவிட்டீர்களா? – பரிதவிக்கும் நுகர்வோருக்கு இப்போது ஒரு மீட்பு வாய்ப்பு”!!
Next articleபி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!