மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!

Photo of author

By Parthipan K

மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!

Parthipan K

Updated on:

Frustrated by lack of money for daughter's higher education: Woman sets herself on fire

மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!

நெகமம் அடுத்து மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம் (கூலி தொழிலாளி). இவரது மனைவி சாரதா (வயது 43). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனியார் கல்லூரியில் படிப்பை தொடர விரும்பியுள்ளார். ஆனால் மேல்படிப்பு சம்மந்தமாக படிப்பை தொடர குடும்பத்தில் போதிய வருமானமும் இல்லை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத காரணத்தால் விரக்தியில் மன வருத்தத்தில் இருந்துள்ளார். வேதனையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாரதா உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலியில் அலறி துடிதுடித்தார்.

பின்பு இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சாராதவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சாரதா கோவை அரசு மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்த சாரதா  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.