உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

Photo of author

By Sakthi

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

Sakthi

Updated on:

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இவருடைய இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த திட்டத்தை பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.