கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்!

Parthipan K

Funny incident in Coimbatore district! The teacher was jailed for reprimanding the student!

கோவை மாவட்டத்தில் அரங்கேறிய வேடிக்கை சம்பவம்! மாணவனை கண்டித்த காரணத்தால் ஆசிரியருக்கு ஜெயில்!

தற்போது பள்ளிகளில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது அதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் என பலரும் குற்றச்சாட்டை வரும் நிலையே ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து ஒரு வார்த்தை கூறினால் கூட ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டை வழக்கு பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் கோவை மாவட்டம் சேரன் மாநகரப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது  மகன் (9). அந்த பகுதியில்யுள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் அந்த மாணவன் வகுப்பறையில் அதிகம் சுறுசுறுப்பாகவும் மிகவும் குறும்பு செய்வதாகவும் அங்கிருந்த சக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஒரு ஆசிரியர் பலமுறை கண்டித்துள்ளார். மேலும் அந்த மாணவன் ஆசிரியர் கண்டிப்பதை பொருட்படுத்தாமல் மீண்டும் குறும்புத்தனம் செய்துள்ளார். அதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆசிரியை அந்த மாணவனை அடித்ததாகவும்  கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அந்த மாணவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் கோவை பீளமேடு போலீசார் நிலையத்தில் அந்த ஆசிரியரின் மீது புகார் அளித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.