இந்த இரண்டு வீரருக்கு கேல் ரத்னா விருதா?

Photo of author

By Parthipan K

ராஜீவ் கேல் ரத்னா விருது என்பது விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு  வழங்கி கவுரவித்து வருகிறது. விருதை பெறுவதற்கு இவர்கள் தகுதியான நபர்கள்தானா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இன்று விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.