“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

0
263

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

இந்திய அணியின் முன்னாள் வீரர் டி 20 உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தும் அணியாக அமையும் எனக் கூறியுள்ளார்.

டி 20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கணித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும் இதுபற்றி “என்னைப் பொறுத்தவரை இலங்கை அபாயகரமான அணியாக இருக்கும். யாருமே அவர்கள் ஆசியக்கோப்பையை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த கூடுதல் நம்பிக்கையில் அவர்கள் இப்போது விளையாடுவார்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். டி 20 போட்டியில் எந்த அணியையுமே குறைத்து மதிப்பிடமுடியாது” எனக் கூறியுள்ளார்.

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

Previous article“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து!
Next articleசேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here