“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து!

0
220

“முதல் போட்டியில் மட்டும் அது நடந்துவிட்டால்…. இந்தியா கோப்பையைக் கூட வெல்லும்…” ரெய்னா கருத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கிறது.

2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியிடும் தேர்வுப் போட்டிகள் நடக்க உள்ளன.

கடந்த முறைப் போலவே இந்த முறையும் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “இந்திய அணியை 15 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு பிசிசிஐ அனுப்பியது சிறப்பான முடிவு. முதல் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு அணிகளுக்குமே சவாலானதாக இருக்கும். இந்த போட்டியில் மட்டும் இந்தியா வென்றுவிட்டால் அணியின் நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இறுதிப் போட்டிக்கு செல்வது கூட எளிதாகிவிடும்” எனக் கூறியுள்ளார்.

Previous articleSBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி:! இனி இதற்கு கூடுதல் கட்டணம்!
Next article“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here