ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

0
81

ஜெய் ஷா நீடிக்கும் போது கங்குலி மட்டும் ஏன்?…  கேள்வி எழுப்பும் மம்தா -அரசியலாகும் பிசிசிஐ விவகாரம்

பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய் ஷா செயலாளராக தொடரும் போது கங்குலி மட்டும் ஏன் மீண்டும் தலைவர் பதவியில் நியமிக்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எழுப்பியுள்ளார்.

கங்குலி குறித்து அவர் பேசும் போது “அவர் பதவி பறிக்கப்படுகிறது. ஏன் அவர் தனது பதவியை இழக்கிறார்? அவர் தவறு என்ன? அனைவருக்கும் தெரியும். அனைத்து நாடுகளும். உலகமே. அவரைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம். வங்காளத்திற்கு மட்டுமல்ல, அவர் வங்காளத்தின் தாதா,சகோதரர். ஆனால். அவர் நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை.அனைவருக்கும் அவரைத் தெரியும்.கிரிக்கெட் விளையாடும் எல்லா நாடுகளுக்கும் அவரைத் தெரியும்.அவர் எல்லோருடனும் பணியாற்றியவர்.அவர் பிரபலமானவர்.அதனால்தான் அவர் பதவியை இழக்கிறார்?. அதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.அது மோசமானது மற்றும் வருத்தமாக இருக்கிறது.

ஐசிசிக்கு செல்ல தகுதியானவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். பிரதமருக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐசிசி தேர்தலில் போட்டியிட சவுரவ் கங்குலி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.” எனக் கூறியுள்ளார்.